* ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனி நாசி குழாயைப் பயன்படுத்துவதால் கிருமித்தொற்று பரவாது.
மதுரை, ஜூன் 10 -
சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படும் மூக்கில் எண்ணெய் சொட்டு மருந்து விட்டு சிகிச்சை செய்யும் முறைக்கான கருவியை வடிவமைத்து மத்திய அரசின் காப்புரிமை பெற்றுள்ளார் மதுரையைச் சேர்ந்த சித்தா டாக்டர் ஜெ. ஜெயவெங்கடேஷ்.
காப்புரிமை குறித்து அவர் கூறியதாவது: ஏற்கனவே இந்த கருவியைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைக்கு கடந்த 2025 பிப். 21ல் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழகத்தில் நடந்த பன்னாட்டு அறிவியல் கருத்தரங்கில் முதல் பரிசு கிடைத்தது. தற்போது இக்கருவிக்கான காப்புரிமை மத்திய அரசின் சார்பில் கிடைத்துள்ளது.
இக்கருவி மூலம் புற மருத்துவம், நசியம், பஞ்சகர்மா போன்ற சிகிச்சை முறைகளை எளிதாகச் செயல்படுத்தலாம்.
4 அங்குல நீளம், எட்டு அங்குல நீளத்துடன், ஒரு அங்குல நீளத்தில் மருந்து உள்ளே செல்லும் குழாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. எத்தனை சொட்டுகள் மருந்து விட வேண்டும் என்பதை துல்லியமாக நிர்ணயித்து நோயாளிக்குச் செலுத்தலாம்.
இதன் மூலம் 5 மைக்ரோ லிட்டர் முதல் 500 மைக்ரோ லிட்டர் வரை (Masiyam Applicator) திரவ வடிவிலான மருந்துகளை மூக்கில் விடலாம். இதற்கு மற்றவர்கள் உதவியும் தேவையில்லை. பஞ்சகர்மா சிகிச்சையிலும் மூக்கில் சொட்டுமருந்து விடலாம்.
அடுத்தகட்ட ஆராய்ச்சியின் மூலம் உள்ளங்கை அளவு கருவியை வடிவமைக்கலாம். இது சித்தா, ஆயுர்வேதாவில் மட்டுமின்றி அலோபதி மருத்துவத்திற்கும் இந்த கருவியை பயன்படுத்தலாம்.
2 முதல் 8 சொட்டுகள் வரை துல்லியமான அளவில் கிருமித்தொற்று இல்லாமல் சிகிச்சை செய்ய முடியும். மிகச் சிறிதான வடிவமைப்பின் மூலம் சித்த மருத்துவ சிகிச்சையை எளிமைப்படுத்தி குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இந்த கருவியை எளிதாகக் கையாளலாம் என்றார்.








OP unit with Pura Maruthuvam (External Therapies)
Kokila Siddha Hospital & Research Centre
27, Jaihindpuram 1st Street,
Behind Tamilnadu Polytechnic,
Madurai-625 011
: 0452-2675674, 2675400
+91 9842167567, 900 3000 250, 52
OP and IP unit with Pura Maruthuvam (External Therapies)
Kokila Siddha Hospital & Research Centre
(OP and IP Unit with
Kunnanampatti (Village),
Karadikkal (Po),
Tirumangalam (Tk),
Madurai-625 706.
: 900 3000 251, 57, 58