+91 9842167567, 0452 2675674

logo

தமிழ் மொழி வரலாறும் தமிழர் மருத்துவ அறிவியலும்

இந்திய மருத்துவ முறைகளில் சித்த மருத்துவம் சிறப்பு வாய்ந்தது. சித்த மருத்துவத்தில் இரசவாதம், வர்மம், பூநீறு, அமுரி, முப்பு ஆகியன மறைபொருளாக இன்றும் யாராலும் எளிதில் புரிந்து கொள்ளமுடியா வண்ணம் இருக்கின்றன. இதனை அடிப்படையாக வைத்தே தமிழறிஞர்களும், வேதியியல் விஞ்ஞானிகளும் சித்த மருத்துவத்தின் உண்மையை புரிந்து கொள்ளாமல் தங்கள் மருத்துவ முறைகளை ஆவணப்படுத்த முயற்சிக்கின்றனர்.

நமது சித்த மருத்துவம் தவறானவர்கள் கையில் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான் சித்தர்கள் மறைமுகமாக பல்வேறு கருத்துகளை தங்கள் சுவடிகளில் குறித்து வைத்திருந்தனர். ஆனால் சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்காகவும் சித்த மருத்துவ முறைகளை ஆவணப்படுத்துவதற்கு உலக அரங்கில் சித்த மருத்துவத்தின் சிறப்பான மருந்து முறைகளை பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் ஆய்வுக்கட்டுரை வெளியீடுகள் மூலமாக ஆவணப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.

சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முறைகள், சித்த மருத்துவ வரலாறு, சித்தர்களின் வரலாறு சார்;ந்த பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் தமிழில் பாமினி அல்லது லதா மென்அச்சு பொருளில் அல்லது ஆங்கிலத்தில் Times new roman என்ற மென்அச்சு பொருளில் மைக்ரோசாப்ட்வேர்டு டாக்குமெண்டில் ஆக்கப்பூர்வமான ஆய்வுக்கட்டுரைகளை 25 ஜனவரி 2019 க்குள் jeyavenkateshdrs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் அல்லது www.herbalsiddha.com என்ற இணையதள முகவரியில் நேரடியாக பதிவு செய்யவும். சிறப்பான மூன்று கட்டுரைகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் அளிக்கப்படும்.

தமிழ் மருத்துவம்
தமிழர்; வாழ்வியல்
சித்த மருத்துவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
வர்மம்
இரசவாதம்
பூநீறு
அமுரி
சித்தர்கள் வரலாறு
சித்தர் சமாதி தலங்கள்

பற்றிய தரவுகள் மற்றும் ஆதாரங்களுடன் கூடிய தமிழ் மருத்துவ மற்றும் மொழி ஆய்வு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. ஆய்வுக்கு உதவிய மற்றும் தொகுப்பிற்கு உதவிய நூல்களின் பெயர்கள், ஆண்டு, ஆசிரியர் மற்றும் பதிப்பகத்தின் பெயருடன் கூடிய ஆய்வுக்கட்டுரைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

தங்கள் ஆய்வுக்கட்டுரைகள் ISBN எண்ணுடன் கூடிய விழா மலரில் வெளயிடப்படும். தமிழ் வரலாறு பற்றிய ஆங்கில கட்டுரைகள் பன்னாட்டு இதழில் வெளியிட ஏற்பாடு செய்யப்படும். சித்த மருத்துவத்தின் தமிழ் வர்ம நூல்களின் பெயர்களை தொகுத்து தருபவர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் பாராட்டுச் சான்று வழங்கப்படும். கல்லூரியில் தமிழ், வரலாறு துறையை சார்ந்தவர்கள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பலாம். மேலும் தகவல்களுக்கு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ; அவர்களை அலைபேசி 9003000250 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தமிழ் மருத்துவ முறைகளை பாதுகாக்க ஒன்றிணைவோம்.

 

Look  forward  to  hearing  from  you  (Contact  mobile:  98421  67567,  90030  00250)  and with  regards 

Dr.  J  Jeyavenkatesh,
Chairman,   
27,  Jaihindpuram  I  Street,   
Madurai  625011,  Tamilnadu   
Email:  jeyavenkateshdr@yahoo.com 
Website:  www.herbalsiddha.com